மலேசிய ஏர்லைன்சுக்கு சொந்தமான விமானங்களில் பயணம் செய்கின்றவர்கள், சில குறிப்பிட்ட வழித்தடங்களில் சொந்தமாக உணவை கொண்டு வரலாம் என்று அந்த தேசிய விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
மலேசிய ஏர்லைன்ஸின் புதிய கேட்டரிங் நிறுவனத்தின் உணவு சேவை வழங்கப்படாத வழித்தடங்களுக்கு பயணிகள் சொந்தமாக உணவை கொண்டு வரலாம்.
எனினும் சூடுகாட்டி உண்ணக்கூடிய அல்லது ஹலாவ் உணவு வகைகள் கண்டிப்பாக அனுமதிக்கப்படாது என்று மலேசியா ஏர்லைன்ஸ் பெர்ஹாட் அறிவித்துள்ளது.
கடந்த 25 ஆண்டு காலமாக மலேசிய ஏர்லைன்ஸ் விமானங்களுக்கு உணவு விநியோகிப்புச் சேவையை வழங்கி வந்த பிராஹிம்ஸ் உணவு சேவைகள் நிறுவனத்தின் குத்தகைக்கான ஒப்பந்தம், முடிவுக்கு வந்தததைத் தொடர்ந்து மலேசிய ஏர்லைன்ஸின் உணவு விநியோகச் சேவையில் தற்போது பாதிப்பு ஏற்பட்டுள்ளது.