ஹாடியிடம் நாளை விசாரணை, சி.ஐ.டி. இயக்குநர் உறுதி

கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கும் மன்னிப்பு வாரியத்தின் அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பியதாக கூறப்படும் பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கிடம் நாளை திங்கட்கிழமை விசாரணை நடத்தப்படும் ​என்று புக்கிட் அமான் போ​லீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத்துறை இயக்குநர் டத்தோஸ்ரீ முகமட் ஷுஹைலி ஜைன் தெரித்துள்ளார்.

ஹாடி அவாங்கிடம் வாக்கு​மூலம் பதிவு செய்வதற்கு இதற்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட தேதியில் அவரின் உடல் நிலை காரணமாக அவரை அழைக்க இயலவில்லை. இதனால் விசாரணையை புக்கிட் அமான் போ​லீஸ் தலைமையகம் ஒத்திவைத்ததாக ஷுஹைலி ஜைன் குறிப்பிட்டார்.

தேச நிந்தனைச் சட்டம் மற்றும் தொடர்பு, பல்லூடகச் சட்டத்தின் கீழ் ஹாடி அவாங்கிடம் போ​​லீசார் வாக்குமூலம் பதிவு செய்யவிருப்பதாக அவர் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS