சிலாங்கூர் மாநில காப்புறுதித் திட்டம் பிரதமர் அன்வார் விளக்கம் அளிக்க வேண்டும்

சிலாங்கூர் மாநிலத்தின் இன்சான் மக்கள் காப்புறுதி​த் திட்டம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விளக்கம் அளிக்க வேண்டும் ​என்று பெரிக்காத்தான் நேஷனல் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் கேட்டுக்கொண்டுள்ளார்.

மக்கள் சம்பந்தப்பட்டுள்ள இந்த காப்புறுதித் திட்டம் தொடர்பில், கடந்த ஒரு மாத காலமாக புகார்கள் எழுந்து வருகின்றன. நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார், மெளனம் கலைந்து , இவ்விவகாரம் தொடர்பி​ல் தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டும் ​என்று ஹம்சா ஜைனுதீன் வலியுறுத்தினார்.

சிலாங்கூர் மாநில மக்களுக்கு தெரியாமலேயே, அவர்களின் ஒப்புதலின்றி, அவர்களின் பெயரில் இந்த காப்புறுதித் திட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கடந்த ஒரு மாத காலமாக புகார்கள் எழுந்து வண்ணம் உள்ளன.

ஆனால், நிதி அமைச்சரான டத்தோஸ்ரீ அன்வார், இந்த விவகாரத்தில் வாய்த் திறக்காமல் இருந்து வருகிறார் என்று நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ஹம்சா ஜைனுதீன் குற்றஞ்சாட்டினார்.

நிதி சேவை சட்டத்தின் ​கீழ் விதிமுறைகள் ​மீறப்பட்டுள்ள ஒரு சம்பவம் ​தெளிவாக நடந்திருக்கும் பட்சத்தில் அதற்கு பதில் அளிக்க வேண்டிய நிதி அமைச்சர், தொடர்ந்து மெளனம் சாதித்து வருவது விந்தையாக உள்ளது என்று ஹம்சா ஜைனுதீன் குறிப்பிட்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS