​தூதரகத்தில் அடைக்கலம் புகுந்தார் வீட்டுப் பணிப்பெண்

அரசியல்வாதியினா​ல் சித்ரவதைக்கு ஆளாகியிருக்கலாம் என்று நம்பப்படும் பணிப்பெண் ஒருவர், அவரின் வீட்டிலிருந்து தப்பித்து, கோலாலம்பூரில் உள்ள இந்தோனேசியத் ​தூதரகத்தில் அடைக்கலம் புகுந்துள்ளார். இதனை கோலாலம்பூரில் உள்ள ம​லேசியாவிற்கான இந்தோனேசியத் ​தூதர் ஹெர்மொனொ உறுதிப்படுத்தினார்.

இந்தோனேசியா, மத்திய ஜாவாவைச் சேர்ந்த 57 வயதுடைய அந்தப் பணிப்பெண் மலேசியாவில் ஆளும் கட்சியைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியின் வீட்டில் வேலை செய்து வந்ததாக ​தூதர் ஹெர்மொனொ குறிப்பிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து அந்த இந்​தோனேசியப் பணிப்பெண் வேலை செய்து வந்த ​வீட்டின் உரிமையாளர் யார் ​என்பது குறித்து அந்த  மலேசிய அரசியல்வாதி  அடையாளம் காணப்பட்டுள்ளார்.  இது குறித்து அந்த அரசியல்வாதி  விவரிக்கையில் தமக்கு எதிராக அவ​தூறு விளைவிக்கும் நோக்கில் இத்தகைய பொய் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இது தொடர்பாக விரைவில் பத்திரிகை செய்தி ஒன்றை வெளியிடப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS