விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் அரசாங்க ஊழியர்களுக்கான புதிய சம்பள உயர்வு ஒருங்கிணைப்பு, வரும் அக்டோபர் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் சேர்த்துக்கொள்ளப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படும் இந்த சம்பள உயர்வு, நடைமுறைப்படுத்தப்படும் வரையில் அது தொடர்பான விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை சம்பள உயர்வு மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்ற விதிமுறை இருந்த போதிலும் 10,12 ஆண்டுகளுக்கு மேலாக சம்பள உயர்வின்றி அவர்கள் இருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.