மதம், இனம் மற்றும் ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்ட 3ஆர் சர்சைக்குரிய விவகாரத்தை யாரும் எந்தவொரு தரப்பும் பேசக்கூடாது என்று அரச மலேசியப் போலீஸ் படை தடை விதித்த போதிலும் அந்த 3ஆர் விவகாரத்தை தாம் தொடர்ந்து பேசப் போவதாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மதம், இனம் மற்றும் ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்ட 3ஆர் விவகாரத்தை பேசியதற்காக தம்மிடம் போலீசார் இதுவரையில் ஒன்பது முறை விசாரணை நடத்தி விட்டதாக துன் மகாதீர் குறிப்பிட்டார். தமக்கு எதிராக விசாரணை மேல் விசாரணை நடந்து கொண்டு இருக்கிறது. தாமும் தொடர்ந்து பேசிக்கொண்டு இருப்பதாக துன் மகாதீர் குறிப்பிட்டார்.
அடுத்து பத்தாவது முறையாக விசாரணைக்கு அழைப்பார்கள்.அதன் பிறகு 11 ஆவது முறையாக மீண்டும் விசாரணைக்கு அழைப்பார்கள். வாக்குமூலம் பதிவு செய்வார்கள். விசாரணைதானே அவர்கள் விசாரணை செய்து கொண்டே இருக்கட்டும். தாம் தொடர்ந்து பேசிக்கொண்டு இருக்கப் போவதாக துன் மகாதீர் தமது பிடிவாதக் குணத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார்.
அதன் அடிப்படையில் சட்டத்துறை அலுவலகம் எடுத்துள்ள முடிவின்படி, அகமட் ஜாஹிட்டிற்கு எதிரான , 47 குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்படாமல், வழக்கிலிருந்து அவர் ஏன் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதற்கு , 11 காரணங்களை டிபிபி முஹ்மாட் டுசுக்கி மொக்தார் நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளார்.
இந்த நிகழ்வில் பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின், பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங், கெராக்கன் தலைவர் டொமினிக் லாவ் உட்பட முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.