வடக்கு – தெற்கு நெடுஞ்சாலையின் 144.4 வது கிலோ மீட்டரில் நிகழ்ந்த கோர சாலை விபத்தில் 45 நாட்களே நிரம்பிய கைக்குழந்தை உட்பட இருவர் உயிரிழந்தனர்.
இன்று அதிகாலை 3.10 மணி அளவில் பாகோ அருகில் நிகழ்ந்த இவ்விபத்தில் 2 மோட்டார் சைக்கிள்கள், ஒரு கார் சம்பந்தப்பட்டிருந்ததாக மூவார் மாவட்ட போலீஸ் தலைவர் ரைஸ் முக்லிஸ் அஸ்மான் தெரிவித்தார்.
இதில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவரும் காரில் பயணித்த ஆண் குழந்தை ஒன்றும் உயிரிழந்ததாக அவர் விளக்கினார்.