வரும் சனிக்கிழமை நடைபெறும் பூலாய் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் சுஹைஸான் கையாத் வாக்களிப்பது சட்டவிரோத செயலாகும் என்று கூறியிருக்கும் பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான் ஶ்ரீ முகைதீன் யாசினிடம் விசாரணை நடத்தப்படும் என்று போலீஸ்படைத் துணைத்தலைவர் டத்தோ ஶ்ரீ அயோப் கான் மைதீன் பிச்சை தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பாக அந்த முன்னாள் பிரதமருக்கு எதிராக விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளதாக அயோப் கான் குறிப்பிட்டுள்ளார்.
முகைதீனின் இந்த அறிக்கை சச்சைக்குரிய 3ஆர் விவகாரத்தை தொடுவதாக உள்ளது முகைதீனிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என்று துணை ஐ.ஜி.பி மேலும் விவரித்தார்.