துணைப் பிரதமர் டத்தோ செரி அஹ்மத் ஜாஹித் ஹமிடி தமக்கு எதிரான லஞ்ச ஊழல் வழக்கில் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டிருப்பது மூலம் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது தலைமையிலான அரசாங்கத்தின் நிலைத்தன்மையை நிலை நிறுத்திக் கொண்டிருப்பதாக பெர்சத்து கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர் வான் அஹ்மத் ஃபய்சல் வான் அஹ்மத் கமல் தெரிவித்துள்ளார்.
அகமாட் ஸாஹிட்டின் விடுவிப்பு மூலம் ஒற்றுமை அரசாங்கம் தனது ஆட்சியை நிலை நிறுத்திக் கொண்டிருப்பதால் பிரதமர் அன்வார் இனி மகிழ்ச்சி கொள்வார் என்று வான் அஹ்மத் ஃபைஹ்சல் குறிப்பிட்டுள்ளார்.
இதற்குத்தானே இத்தகைய அரசியல் அரங்கேற்றங்கள் நடந்துள்ளன என்று அந்த இளைஞர் பிரிவு தலைவர் மறைமுகமாக கிண்டல் செய்துள்ளார்.