மாது ஒருவரிடம் ஆபாச சேட்டை புரிந்ததாக நம்பப்படும் மோட்டர் சைக்கிளோட்டி ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
நேற்று பிற்பகல் 3.00 மணி அளவில் உணவகம் ஒன்றின் கார் நிறுத்தும் இடத்தில் மாதுவிடம் தாகத முறையில் அந்த மோட்டார் சைக்கிளோட்டி நடந்து கொண்டதாக செபெராங் பிராய் தெங்கா மாவட்ட போலிஸ் தலைவர் டான் செங் சான் தெரிவித்துள்ளார்.
PLV 1184 என்ற பதிவெண்ணைக் கொண்ட அந்த மோட்டார் சைக்கிளோட்டி போலி எண் பட்டையைக் கொண்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
அந்த மாதுவிடம் தமது காற்சட்டையைக் கழற்றி ஆபாசமாக நடந்து கொண்ட நபருக்கு எதிராக சம்பந்தப்பட்ட மாது போலீசில் புகார் செய்துள்ளதாக டான் குறிப்பிட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக காணொலி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருவதையும் அவர் சுட்டிக் காட்டினார்.