போலீஸ் சோதனையில் 63 பேர் கைது

ஜொகூர் பாருவில் 2 கேளிக்கை மையங்களில் போலீசார் நடத்திய திடீர் சோதனை நடவடிக்கையில் 63 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை 12.45 மணி முதல் 3 மணி வரை மேற்கொள்ளப்பட்ட இச்சோதனை நடவடிக்கையில் அந்த கேளிக்கை மையங்களில் இருந்த 210 பேரிடம் போலீசார் சோதனை மேற்கொண்டதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமிஸ்னர் டத்தோ கமாருல்ஜமான் மாமத் தெரிவித்தார்.

இவர்களில் 22 பெண்களும் 36 ஆண்களும் போதைப் பொருள் உட்கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதைத் தொடர்ந்து அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கமாருல்ஜமான் குறிப்பிட்டார்.

19க்கும் 56க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த 63 பேரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்திருப்பதாக அவர் மேலும் விவரித்தார்.

WATCH OUR LATEST NEWS