மித்ரா நிதி முறையாக ஒதுக்கப்பட்டு வருகிறது

இந்தியர்களின் சமூகவியல் பொருளாதார உருமாற்றுப் பிரிவான மித்ராவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள 10 கோடி வெள்ளி, சமூகத்திற்கு முழுமையாக சென்றடைவதை உறுதி செய்வதற்கு திட்டமிட்டவாறு நிதி ஒதுக்கப்பட்டு வருவதாக மித்ராவின் சிறப்பு பணிக்குழு தலைவர் டத்தோ ரா. ரமணன் தெரிவித்துள்ளார்.

இதுவரையில் 8 கோடியே 98 லட்ச வெள்ளி, பத்து முதன்மைத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதையும் டத்தோ ரமணன் சுட்டிக்காட்டினார். 2000 பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு 2 கோடியே 80 லட்ச வெள்ளி ஒதுக்கப்பட்டு, அவர்களின் வங்கி கணக்கிலும் சேர்க்கப்பட்டு விட்டதாக அவர் தெளிவுபடுத்தினார்.

அடுத்தக்கட்ட தொடர் திட்டங்களுக்கு கிட்டத்தட்ட 6 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டுவிட்டது. இதுவரையில் 8 கோடியே 98 லட்ச வெள்ளி நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் எஞ்சியப் பணம் விரைவில் தாம் அறிவிக்கவிருக்கும் மூன்று புதிய திட்டங்களில் சேர்க்கப்படும் என்று உள்ளூர் வானொலிக்கு அளித்த சிறப்பு பேட்டியில் சுங்கை பூலோ எம்.பி- யுமான டத்தோ ரமணன் விளக்கினார்.

தவிர, 3916 சிறார்கள் பயன்பெறும் பொருட்டு 145 பாலர்பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்ட திட்டங்களும் இதில் அடங்கும். ஒட்டுமொத்ததில் 10 கோடி வெள்ளி இந்திய சமூகத்தின் சரியான இலக்கை நோக்கி பாயும் என்று டத்தோ ரமணன் மீண்டும் உறுதியளித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS