இரண்டு மாணவர்களிடம் ஆபாச சேட்டைப் புரிந்ததாக டோட்ஜ்பால் பயிற்றுநர் ஒருவர், பெட்டாலிங் ஜெயா, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டார். 53 வயது டெரென்ஸெ இ சூன் என்ற அந்த டோட்ஜ்பால் பயிற்றுநர், மாஜிஸ்திரேட் சஃப்ரான் ராஹிம் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
அந்த பயிற்றுநர் குச்சி ஒன்றை பயன்படுத்தி, 11 வயது மதிக்கத்தக்க இரு மாணவர்களுக்கு எதிராக இந்த ஆபாச சேட்டையைப் புரிந்ததாக அவருக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள இரு குற்றச்சாட்டுகளில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள பள்ளி ஒன்றின் மண்டபத்தில் அந்த டோட்ஜ்பால் பயிற்றுநர் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த பயிற்றுநர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.