அரிசி பற்றாக்குறைக்கு தீர்வு காண ஆசியான் நாடுகள் உதவத் தயார்

அரிசி உட்பட அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை தொடர்பில் மலேசியாவிற்கு ஆசியான் நாடுகள் உதவுவதற்கு தயாராக இருப்பதாக விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் முகமட் சாபு தெரித்துள்ளார்.

மலேசியா மட்டுமின்றி இதர உறுப்பு நாடுகளுக்கும் உதவுவதற்கு அவை உறுதி பூண்டுள்ளன என்று அமைச்சர் குறிப்பிட்டார.

கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி கோலாலம்பூரில் நடைபெற்ற 45 ஆவது ஆசியான் விவசாய அமைச்சர்கள் மாநாட்டில் இந்த உறுதிபாடு தெரிவிக்கப்பட்டதாக முகமட்சாபு குறிப்பிட்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS