பெலங்கை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு மையங்கள் இன்று திறக்கப்பட்டன

பகாங், பெலாங்ஙாய் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்களிப்பு இன்று நடைபெற்று கொண்டிருக்கிறது. காலை 8 மணியளவில் அனைத்து வாக்குச்சாவடிகளும் திறக்கப்பட்டன. 16,383 வாக்காளர்களை உள்ளடக்கிய இத்தொகுதியின் இடைத் தேர்தல் சுமூகமாக நடைபெறுவதற்கு மலேசிய தேர்தல் ஆணையமான எஸ்பிஆர் சார்பில் 312 அதிகாரிகள் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்த இடைத் தேர்தலில் பாரிசான் நேஷ்னல் சார்பில் டத்தோ அமிசார் அபு அடாம்மும், பெரிக்காத்தான் நெஷ்னல் சார்பில் சார்பில் கசிம் சாமாட்டும், ஒரு சுயேட்சை வேட்பாளரான ஹஸ்லிஎல்மி டிஎம் சுல்ஹஸ்லி என்பவர் என்பவர் கார் சின்னத்திலும் போட்டியிடுகின்றனர். இந்த மும்முனைப் போட்டிக்கான தேர்தல் முடிவு 8.30 மணியளவில் ​வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS