மலேசிய இந்தியர்களை ஒரு வலிமைமிகுந்த சமூகமாக உருவாக்கும் நோக்கில் இன்று அக்டோபர் 7 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு கிள்ளான், லெட்சுமணா மண்டபத்தில் நடைபெறவிருக்கும் இந்தியர்களுக்கான ஒருங்கிணைப்புக்கூட்டத்தில் அமைக்கப்படவிருக்கும் இந்தியர்களுக்கான ஒருங்கிணைப்பு அமைப்பு, ஓர் அரசியல் கட்சியாக செயல்படுவதா? அல்லது ஒரு பொது இயக்கமான இருந்து இந்தியர்களுக்கு உதவுவதா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் மடானி அரசாங்கத்திற்கு வலு சேர்க்கும் வகையில் இந்த இயக்கம் அமைக்கப்படுவமா? அல்லது ஒரு சுயேட்சை அமைப்பாக செயல்படுமா? என்பது குறித்து உறுதியாக தெரியவில்லை.
புதிய தடம், புதிய அணுகுமுறை என்ற கருப்பொருளில் புதிய விடியலை நோக்கி என்ற தலைப்பில் நடைபெறவிருக்கும் இக்கூட்டத்திற்கு ஓம்ஸ் அறக்கட்டளையின் தலைவர் ஓம்ஸ் தியாகராஜன் தலைமையேற்கவிருக்கிறார்.
இக்கூட்டத்தில் அனைத்து அரசியல் கட்சிகள், பொது இயக்கங்கள், அரசு சாரா அமைப்புகளின் பொறுப்பாளர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் கே.பி. சாமி தெரிவித்துள்ளார்.