பெண் மருத்துவர் ஒருவர், தனது 8 மாத பெண் குழந்தையை ஞாபக மறதியின் காரணமாக 10 மணி நேரம் கைவிட்ட நிலையில் அந்த குழந்தை மரணம் அடைந்த சம்பவத்தில் போலீசார் புலன் விசாரணை மேற்கொண்டு வந்த போதிலும் தங்கள் குழந்தையை பறிகொடுத்துள்ள தம்பதியர் அந்த துயரத்திலிருந்து மீள்வதற்கு சற்று வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று கோலாலம்பூர் மாநகர் போலீஸ் தலைவர் டத்தோ அல்லௌடீன் அப்துல் மஜிட் தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை கோலாலம்பூர், செராஸ், சான்சிலர் துவான்கு முஹ்ரிஸ் மருத்துவமனையின் கார் நிறுத்தும் இடத்தில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பாக அந்த மருத்துவமனையின் பணியாற்றும் ஒரு மருத்துவரான மாதுவையிடம் விசாரணை செய்வதற்கு முன்னதாக தங்களுக்கு ஏற்பட்ட இந்த துயரத்திலிருந்து அவர்கள் முதலில் மீள வேண்டும் என்று அலாவுதீன் குறிப்பிட்டார்.
தமது குழந்தையை தஸ்கா எனப்படும் குழந்தை பராமரிப்பு மையத்திற்கு கொண்டு சென்று விடுவதற்கு பதிலாக குழந்தையை காரின் பின் இருக்கையிலேயே கிடத்திய நிலையில் அந்த பெண் டாக்டர் தமது பணியிடத்திற்கு சென்று விட்டதால் காருக்குள்ளேயே காற்றோட்டம் இல்லாமல் பெரும் அவதிக்குள்ளாகியிருக்கலாம் என்று நம்பப்படும் அந்த கைக்குழந்தை, இறந்து கிடந்தது 10 மணி நேரத்திற்கு பின்னர் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.