தமது இரு வழக்கறிஞர்களின் அலுவலகங்களில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் ஆம் திடீர் சோதனை மேற்கொண்டு கோப்புகளை வாரிச் சென்று இருப்பது மூலம் அந்த ஆணையம் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறது என்று பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அவதூறு வழக்குகளை தொடுப்பதற்கு டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தமது வழக்கறிஞர் நிறுவனங்களாக ரொஸ்லி டஹ்லான் மற்றும் அதன் துணை நிறுவனமான ரொஸ்டி டாஹ்லான் சரவனா ஆகிய வழக்கறிஞர் நிறுவனங்களை பயன்படுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் அந்த இரு வழக்கறிஞர்கள் நிறுவனங்களின் அலுவலகங்களிலும் எஸ்பிஆர்எம் அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு இருப்பது தெரியவந்துள்ளது.