புகைமூட்டம் காரணமாக தங்கள் பள்ளிகளில் காற்றின் தூய்மைக்கேட்டு அளவின் குறியீடு, 200 ஐபியுவை தாண்டுமானால் மாவட்ட கல்வி அலுவலகத்தின் அனுமதிக்காக காத்திருக்காமல் பள்ளிகளை மூடுவதற்கு பள்ளி நநிர்வாகத்திற்கு அதிகாரம் உள்ளது என்று துணை கல்வி அமைச்சர் லிம் ஹுய் யிங் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் தங்கள் வட்டாரத்தில் புகைமூட்டத்தின் அளவு, எவ்வாறு உள்ளது என்பதை கண்டறியும் பொருட்டு சுற்றுச்சூழல் இலாகாவின் உதவியுடன் ஒவ்வொரு நாளும் நடப்பு நிலையை அணுக்கமாக கண்காணித்து வருமாறு பள்ளி நிர்வாகங்களை துணை கல்வி அமைச்சர் லிம் ஹுய் யிங் கேட்டுக்கொண்டார்.