இன்று பிற்பகல் 3 மணி நிலவரப்படி, நாட்டின் 5 பகுதிகளில் காற்றின் தூய்மை மோசமான நிலையில் இருப்பதாக சிஸ்தம் பெங்குருசான் இன்டேக்ஸ் பென்செமாரான் உடாரா மலேசியா (எ.பி.ஐ.எம்.எஸ்) இன் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஜோகூரின் லார்க்கின், பாசீர் கூடாங், பத்து பகாட், கோத்தா திங்கி, நெகிரி செம்பிலானில் நீலாய் ஆகிய வட்டாரங்களில் காற்றின் மாசு மோசமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், கோத்தா கினா பாலு, தைப்பிங், இலங்காவி, பாலிக் பூலாவ் ஆகிய பகுதிகளில் காற்றின் மாசு நிலை ஆரோக்கியமாக இருப்பதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது என அந்த இணையத்தளம் தெரிவித்தது.