குடும்ப மாது விசாரணை செய்யப்பட்டு வருகிறார்

போலீஸ் உடையில் காணப்பட்ட இரண்டு நபர்கள் தமது இரண்டு வயது மகனை கடத்திச்சென்று பிணைப்பணம் கோரி மிரட்டியதாக பொய் புகார் அளித்ததாக கூறப்படும் குடும்ப மாது ஒருவர் தற்போது போலீசாரால் விசாரணை செய்யப்பட்டு வருகிறார.

38 வயதுடைய அந்த மாது செய்துள்ள புகாரின் அடிப்படையில் போலீாசார் விசாரணை செய்ததில் அந்த மாதுவின் வீட்டில் பொருத்தப்பட்ட ரகசிய கேமராவில் அப்படி ஏதும் கடத்தல் நடந்ததற்கான அறிகுறிகளோ, காட்சியோ இல்லை என்று சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அரிஃபை தரவி தெரிவித்தார்.

பொருட்கள் பட்டுவாடா செய்யும் நிறுவனத்திலிருந்து இரு நபர்கள் வருவார்கள் என்றும், அவர்கள் தங்கள் மகனை கடத்திச் செல்வதாக கைப்பேசி அழைப்பு ஒன்றையும் கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி தாம் பெற்றதாக அந்த மாது தெரிவித்த தகவலிலும் உண்மையில்லை என்று அரிஃபை தரவி குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS