மலேசிய ரிங்கிட், அமெரிக்க டாலருடன் சார்ந்து இருப்பதை குறைக்கும் நடவடிக்கையாக டினார் நாணய பயன்பாடு அனைத்துலக வர்த்தகங்களில் பயன்படுத்தும் யோசனை மறுபடியும் பரிந்துரைக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
டினார் பயன்பாடு ஒரு சிறந்த பரிந்துரையாகும். இது ம லேசியாவிற்கு மிகுந்த பலாபலனை தரும் என்று நிதி அமைச்சருமான அன்வார் நம்பிக்கை தெரிவித்தார்.