மக்களின் சிரமங்களை உணர்ந்து அவர்களுக்கு ரொக்கப் பணத்திற்கு மாற்றாக உதவித்தொகை வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலனை செய்து வருவதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அனுவார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
மலேசியர்களுக்கு சென்று அடையவேண்டிய இந்த உதவித்தொகை அன்னிய நாட்டவர்களுக்கும் சென்றடைவதை தவிர்க்க ரொக்க உதவிக்கு மாற்றாக இந்த உதவித்தொகை வழங்கப்படவிருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் இந்த மாற்று உதவித் திட்டமானது எல்லா விவகாரங்களிலும் கடைப்பிடிக்கப்படாது.மாறாக குறிப்பிட்ட விவகாரத்திற்கு மட்டுமே மக்கள் இந்த மாற்று உதவித் திட்டத்தை பயன்படுத்திக்கொண்டு பலன்பெற முடியும் என்று நிதி அமைச்சருமான டத்தோ ஶ்ரீ அனுவார் தெளிவுப்படுத்தினார்.