ரொக்கப் பணப் பரிமாற்றம் மூலம் மக்களுக்கு நேரடியாக உதவித் தொகையை வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
வீண் விரயத்தை தடுப்பது மற்றும் அந்நிய நாட்டினருக்குச் சலுகைகள் சென்று சேர்வதை தவிர்ப்பது ஆகிய நோக்கங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், கோழி, முட்டை போன்ற பொருட்களின் விலை வீழ்ச்சி காரணமாக இந்த அணுகுமுறையை எல்லா மானியத் திட்டங்களுக்கும் பயன்படுத்த முடியாது என்பதையும் பிரதமர் தெளிவுபடுத்தினார்த.
ரொக்க உதவித் தொகை மாற்றம் குறித்து தற்போது பரிசீலிக்கப்பட்டு வருவதோடு விரைவில் இது குறித்து அறிவிக்கப்படும். வீண் விரயம் மற்றும் வெளிநாட்டினர் இதன் மூலம் பலன் பெறுவதை தவிர்ப்பது ஆகியவை இதற்கு பிரதான நோக்கமாக உள்ளது என்றார் அவர்.
இன்று நாடாளுமன்றத்தில் இன்று நேரத்தின் போது பாயா பெசார் உறுப்பினர் டத்தோ முகமது சஹார் அப்துல்லா எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் உதவித் தொகை நேரடியாக மக்களைச் சென்று சேர்வதற்கு ஏதுவாக ரொக்க பரிமாற்ற செயல் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து முகமது சஹார் கேள்வி எழுப்பியிருந்தார்.