மாந்தீரிக சடங்கு செய்வதாக பாலியல் பலாக்காரம்

முவா தாய் பயிற்சியாளர் ஒருவர், 16 வயது பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நான்காம் படிவ மாணவியான அந்தப் பெண், செய்து கொண்ட போலீஸ் புகாரைத் தொடரந்து கிளந்தான், தும்பாட்டை சேர்ந்த 50 வயதுடைய அந்த பயிற்சியாளரை போலீசார் கைது செய்து இருப்பதாக மலாக்கா மாநில போலீஸ் துணைத் தலைவர் டத்தோ சைனால் சாமா தெரிவித்தார்.

மாந்தீரிக சக்தியானால் அந்தப் பெண் பலவீனப்படுத்தப்பட்டு விட்டதாகவும், அந்த தீய சக்தியை அகற்றுவதற்கு மாற்று மாந்தீரிக சடங்கு செய்வதாக கூறி, அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பயிற்சியாளர் மீது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளதாக சைனால் சாமா குறிப்பிட்டார.

அந்த நபர் இக்குற்றத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் மலாக்கா, பத்து பெரென்டாம்மில் புரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அந்த உயர் போலீஸ் அதிகாரி மேலும் கூறினார்.

WATCH OUR LATEST NEWS