இன்று காலையில் இரு ரொஹிங்யா ஆடவர்களுக்கு இடையில் நிகழ்ந்த வாய்த்தகராறு கைகலப்பில் முடிந்ததில் ஒருவர் மிக கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இச்சம்பவம் கோத்தாபாரு, கம்போங் மெலோர் லாமாவில் காலை 8.30 மணியளவில் ஒரு வீட்டின் அருகில் உள்ள சோளத் தோட்டத்தில் நிகழ்ந்தது.
கொலை செய்யப்பட்ட ஆடவர், தனது நண்பரை தேடி அவரின் வீட்டிற்கு வந்த போது தகராறு ஏற்பட்டதாகவும், அவர்களுக்கு இடையிலான வாக்குவாதம் அண்டை வீடுகளில் கேட்கும் அளவிற்கு மிகச் சத்தமாக இருந்தது என்று சந்தேகப் பேர்வழியின் வீட்டின் அருகில் வசித்து வரும் தெங்கு நூர் அயுனி என்ற மாது தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட சந்தேகப் பேர்வழி சோளத் தோட்டத்திலிருந்து கத்தியுடன் வெளியேறிய போதுதான் கொலை நடந்ததாக தாங்கள் உணர்ந்ததாக அந்த மாது மேலும் விவரித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் சந்தேகப் பேர்வழி ஒருவரை போலீசார் கைது செய்து இருப்பதாக கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் சாக்கி ஹாருன் தெரிவித்தார்.