சிறைச்சாலையின் கொள்ளளவை விட கூடுதல் கைதிகள்

நாடு முழுவதும் உள்ள 13 சிறைச்சாலைகளில் அவற்றின் கொள்ளளவைவிட கைதிகளின் எண்ணிக்கை 5.8 விழுக்காடு அல்லது 4,153 பேர் கூடுதலாக இருக்கின்றனர் என்று உள்துறை அமைச்சர் டத்தோ செரி சைஃபுடின் நசுத்தியோன் தெரிவித்துள்ளார்.

75 ஆயிரத்து 629 கைதிகளை உள்ளடக்கிய 40 சிறைச்சாலைகளில் இட நெருக்கடி ஏற்பட்டுள்ள சிறைச்சாலைகளாக சபா கோத்தாகினபாலு, கிளந்தான் பெங்காலான் செபா, திரெங்கானு மாராங் ஆகியவை அடையாளம் காணப்பட்டுள்ளன என்று அமைச்சர் விளக்கினார்.
எனினும் சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கையின் மொத்த கொள்ளளவு கூடுதலாக 20 விழுக்காட்டை தாண்டிவிடக்கூடாது என்று அனைத்துலக நிர்ணய தரம் வலியுறுத்துவதாக சைஃபுடின் நசுத்தியோன் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS