பொருள் சேவை வரியான ஜிஎஸ்தி, மீண்டும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று மசீச தலைவரும், ஆயிர் ஹித்தாம் எம்.பி.யுமான டாக்டர் வீ கா சியோங் கோரிக்கை விடுத்துள்ளார்.
வீண் விரயங்கள் தவிர்க்கப்படும் அதேவேளையில் அடுத்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் நில சொத்துடமை லாப வரி மற்றும் முதலீட்டு லாப வரி ஆகியவற்றுடன் சிக்கல் தோன்றுவது தடுக்கப்படுவதற்கு ஜிஎஸ்தி வரியை இப்போதே நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமாகும் என்று வீ கா சியோங் வலியுறுத்தினார்.
இன்று நாடாளுமன்றத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார்.