திருவாசக முற்றோதல் பெருவிழா

பகாங் மெந்தகாப் ஶ்ரீ மகா மாரியம்மன் கோவில் பரிபாலன சபாவின் ஏற்பாட்டில் கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை மணி 7.00 மணி தொடங்கி மாபெரும் திருவாசக முற்றோதல் பெருவிழா வெகுசிறப்பாக நடைபெற்றது.

இந்தப் பெருவிழாவில் கோலாலம்பூர் சிலாங்கூர், மலாக்கா மற்றும் பஹாங் மாநிலத்தைச் சார்ந்த 400க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டதாக கோயில் நிர்வாகம் தெரிவித்தது.

இந்த முற்றோதல் விழாவில் மாணிக்க வாசகர் பெருமான் அருளிச்செய்த 658 திருவாசகப் பாடல்கள் இசை கச்சேரியோடு முழுவதுமாகப் பாடப்பட்டது.

திருவீதி உலா

உடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சி, மாலை 5.00 மணி அளவில் நிறைவை நாடியது.

இந்த நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பும் ஆதரவும் நல்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் கோயில் நிர்வாகத்தினர் தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

WATCH OUR LATEST NEWS