நாட்டில் இஸ்லாத்தின் மேன்மைக்காக 2024 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் 190 கோடிவெள்ளியை அரசாங்கம் ஒதுக்கியிருப்பது மூலம் அது குறித்து எவ்வித விமர்சனத்தையும், சர்ச்யையும் டிஏபி செய்யாதது மூலம் அந்த கட்சி, இஸ்லாத்திற்கு எதிர்ப்பானது அல்ல என்பது நிரூபிக்கப்பட்டுட்ளளதாக அம்னோ பொதுச் செயலாளர் அஷ்ராஃப் வாஜ்டி டுசுக்கி தெரிவித்துள்ளார்.
இஸ்லாத்திற்கு எதிரான கட்சியைப் போல் டிஏபியை சித்தரித்து, அக்கட்சியை புறக்கணிக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது உட்பட எதிர்க்கட்சியினர், மலாய்க்காரர்கள் மத்தியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், அது பொய் என்று ஆதாரப்பூர்வமாக நிருபிக்கப்பட்டுள்ளதாக அஷ்ராஃப் வாஜ்டி டுசுக்கி குறிப்பிட்டுள்ளார்.