மருத்துவப் பணியாளர்கள் மத்தியில் பகடிவதை சம்பவங்ளை சுகாதார அமைச்சு ஒரு போதும் சகித்துக்கொள்ளாது என்று அதன் அமைச்சர் டாக்டர் சலிஹா முஸ்டாஃபா தெரிவித்துள்ளார்.
பகடிவதையில் ஈடுபட்டதாக மருத்துவப் பணியாளர்கள் கண்டு பிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ர் எச்சரித்துள்ளார்.
அரசாங்க மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நிகழ்ந்து வருவதாக கூறப்படும் பகடிவதை சம்பவங்கள் தொடர்பாக மலேசிய மருத்துவச் சங்கம் மேற்கொண்ட ஆய்வின் வாயிலாக தெரியவந்துள்ளதாக சுகாதார அமைச்சுக்கு தெரியபப்படுத்தப்பட்டுள்ளது என்று டாக்டர் சலிஹா குறிப்பிட்டார்.