அமைச்சர் சிவகுமாரை குறைகூறியது மாற்றுத் திறனாளிகள்

வேலையிடங்களில் பாரப்பட்ச போக்குக்கு ஆளாகும் மாற்றுத் திறனாளிகளின் நலனை பாதுகாப்பதற்கு குறிப்பிட்ட சட்டங்கள் தேவையில்லை என்று தெவித்துள்ள மனித வள அமைச்சர் வி. சிவகுமாரை மாற்றுத் திறனாளிகள் அமைப்பு குறைகூறியது.

அமைச்சர் சிவகுமாரின் இந்த அறிக்கையானது, நாட்டில் உள்ள மாற்றுத் திறனாளிகளின் உண்மையான நிலை, அவர்களுக்கு நடப்பு சட்டத்தில் போதுமான பாதுகாப்பு இல்லை என்பதை அறிந்திருக்கவில்லையென தெரியவந்துள்ளது என்று சியுமான் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

வேலையிடங்களில் பிறரின் ஏளனத்திற்கும்,பாகுபாட்டிற்கும் ஆளாகும் மாற்றுத் திறாளிகளை பாதுகாப்பதற்கு நடப்பு சட்டங்கள் எந்த அளவிற்கு பாதுகாப்பு வழங்கியுள்ளன என்பதை அமைச்சர் அறிக்கை வெளியிடுவதற்கு முன்னதாக விரிவாக ஆராய வேண்டும் என்று மனநலம் பாதிக்கக்கப்பட்டவர்களின் நலன் காக்கும் அமைப்பான சியுமான் வலியுறுத்தியுள்ளது.

WATCH OUR LATEST NEWS