கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பத்தாங் காலியில் 31 பேரை பலிகொண்ட பத்தாங் காலி நிலச்சரிவு சம்பவத்திற்கு கனத்த மழையே முக்கிய காரணமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்தாங் காலி நிலச்சரிவு சம்பவம் தொடர்பில் தடயவியல் ஆய்வுக்குழு மேற்கொண்ட விசாரணை மற்றும் ஆய்வில் இது தெரியவந்துள்ளதாக துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
ஐந்து நாட்களாக பெய்த கனமழையின் அளவு 118.6 முதல் 444.8 மில்லி வரை பதிவாகியுள்ளது. மலைச்சாரலில் பெரியளவில் தேங்கிநின்ற மழைநீர், மண் ஆதாரத்தை அசைத்து, நிலச்சரிவுக்கு வித்திடுள்ளது என்று பத்தாங்காலி நிலச் சரிவு பேரிடர் தொடர்பில் இன்று வெளியிடப்பட்ட ஆய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது என்று அகமட் ஜாஹிட குறிப்பிட்டார்.