திரெங்கானு மாநிலத்தில் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இடைநிலைப்பள்ளி ஒன்றில் சக மாணர்களின் பகுடிவதைக்கு ஆளாகி, தமது செவித்திறனை இழந்த இளைஞர் ஒருவக்கு 6 லட்சம் வெள்ளி இழப்பீட்டை வழங்கும்படி கூட்டரசு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட இளைஞர், செவித்திறன் இழப்பினால் வேலை வாய்ப்பை இழந்து, வாழ்க்கையைத் தொலைத்துவிட்டவரைப் போல தள்ளப்பட்டுள்ளார்.
அவருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு பள்ளி வார்டனும் ,இதர ஐந்து மாணவர்களுமே பொறுப்பேற்க வேண்டும் என்று
நீதிமன்றம் தமது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.