பினாங்கு முதலமைச்சர் பதவியிலிருந்து தம்மை நீக்குவதற்கு வெளிப்படையாக சதி நடக்கிறது என்று தாம் சொல்லவில்லை என்று மாநில முதல்வர் சொவ் கொன் யொ
விளக்கம் அளித்துள்ளார்.
பினாங்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு நடந்த சில விஷயங்களை மேற்கோள்காட்டி ஓர் உவமையாக சொன்னது உண்டு என்றும், ஆனால், அந்த சதி வெளிப்படையாக நடக்கிறது என்று சொல்லவில்லை என்றும் சொவ் கொன் யொ திடீர் பல்டி அடித்துள்ளார்.
முதலமைச்சர் பதவியிலிருந்து தம்மை கவிழ்ப்பதற்கு சதி நடப்பதாக கடந்த வாரம் இறுதியில் பேசியிருந்த சொவ் கொன் யொ, அந்த குற்றச்சாட்டை மறுத்த நிலையில் தாம் அந்த அர்த்தத்தில் கூறவில்லை என்று மழுப்பியுள்ளார்.
உண்மையிலேயே சொவ் கொன் யொ வை நீக்குவதற்கு டிஏபி கட்சிக்குள்ளும், அதற்கு வெளியேவும் சதி நடக்கிறது என்றால் அதற்கான ஆதாரங்களை அவர் நிருபிக்க வேண்டும் என்று கட்சியின் தேசியத் தலைவர் லிம் குவான் எங் விடுத்துள்ள சவாலைத் தொடர்ந்து சொவ் கொன் யொ இன்று பின்வாங்கினார்.