போர்ட்டிக்சன் வட்டாரத்தில் வீடு புகுந்து கொள்ளையிட்டு வந்ததாக நம்பப்படும் நான்கு நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். பிடிபட்டுள்ள அந்த நான்கு நபர்களில் மூவர், பத்துக்கும் மேற்பட்ட குற்றப்பதிவுகளை கொண்டுள்ளதாக போர்ட்டிக்சன் மாவட்ட போலீஸ் தலைவர் ஐடி ஷாம் முகமட் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கெமாங் விரிகுடா கில் உள்ள ஒரு அடுக்கு மாடி வீட்டில் இந்த நால்வரும் கொள்ளையடித்துக்கொண்டு இருந்த போது அவர்களின் செயல் அம்பலத்திற்கு வந்ததாக ஐடி ஷாம் குறிப்பிட்டார்.
சம்பந்தப்பட்டவர்கள் ஒரு முதியவரை மடக்கி அவரிடம் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக ஐடி ஷாம் விளக்கினார்.