பினாங்கு மாநில துணை முதலமைச்சர் ஜக்தீப் சிங் தியோ, மாநில டிஏபி யின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அப்பதவியில் இருந்த முன்னாள் துணை முதலமைச்சர் டாக்டர் பி. இராமசாமி, கடந்த ஆகஸ்ட் மாதம் டிஏபி யிலிருந்து விலகியதைத் தொடர்ந்து காலியாகியுள்ள அப்பதவிக்கு டிஏபி யின் முன்னாள் தலைவர் காலஞ்சென்ற கர்ப்பால் சிங்கின் புதல்வரான ஜக்தீப் சிங் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.