விமானச் சேவையிலிருந்து முடக்கப்பட்டுள்ள உள்ளூர் விமான நிறுவனமான மை ஏர்லைன்ஸ் க்கும் தமக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுவதை பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் மறுத்துள்ளார்.
அந்த சிக்கன கட்டண விமான நிறுவனத்திற்கு அங்கீகாரம் மற்றும் லைசென்ஸ் வழங்கப்பட்ட போது, நாட்டின் பிரதமராக தாம் இருக்கவில்லை என்று முகைதீன் விளக்கம் அளித்துள்ளார்.
மை ஏர்லைன்ஸ் சம்பந்தப்பட்டுள்ள பிரச்னைகளுடன் தம்மை தொடர்புபடுத்த முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. உண்மையிலேயே சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பின்னணி குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்று முகைதீன் தெளிவுபடுத்தினார்.
மை ஏர்லைன்ஸ் இணை தோற்றுநர், சட்டவிரோதப் பண மாற்றத்தில் ஈடுபட்டுள்ளார் என்று கூறி 57 வயதான அந்த தொழில் அதிபரையும்,அவரின் 55 வயது மனைவியையும், 26 வயது மகனையும் போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.