சுபாங் ஜெயாவில் திறப்புவிழா கண்டது சீனி சட்டி சோறு உணவகத்தின் 23 வது கிளை

நாட்டின் முன்னணி பிரான்சைஸ் உணவகமான சீனி சட்டி சோறு உணவகத்தினர், சுபாங் ஜெயாவில் இன்று தனது 23 ஆவது கிளை உணவகத்தை வெற்றிகரமாக திறந்துள்ளனர்.

சீனி சட்டி சோறு உணவகத்தின் சுபாங் ஜெயா கிளைக்கான உரிமைத்தைத் பெற்றுள்ள ஜெய் கோவிந்த் – ராஜேஸ்வரி தம்பதியர் மற்றும் அவர்களின் புதல்வரான அபிஷேக்கினால் வழிநடத்தப்படும் இந்த உணவகத்தை சீனி சட்டிசோறு உணவகத்தின் உரிமையாளர் டத்தோஸ்ரீ சீனிவாசகம் முன்னிலையில் ஜெலுத்தோங் எம்.பி. ஆர்.எஸ்.என் ராயர் மற்றும் ஈப்போ பாராட் எம்.பி., எம். குலசேகரன் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தனர்.

இந்நிகழ்விற்கு பினாங்கு முன்னாள் முதல்வர் லிம் குவான் எங் சிறப்பு வருகை புரிந்தார்.

மலேசியாவில் பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்களின் நாவிற்கு சுவையூட்டும் சீனி சட்டி சோறு உணவகத்தின் 23 ஆவது கிளையை சுபாங் ஜெயாவில் திறந்து வைப்பதில் தாங்கள் பெருமை கொள்வதாக ஈப்போ பாராட் எம்.பி. குலசேகரனும், ஆர்.எஸ்.என் ராயரும் பெருமிதம் தெரிவித்தனர்.

சீனக் கடைகளில் புகழ்பெற்ற சட்டி சோறு உணவு வகையை இந்தியப் பாரம்பரிய உணவோடு இணைத்து, பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்களின் ஆதரவுடன் நாடு முழுவதும் சேர்த்து வருவதாக சீன சட்டிசோறு உணவககத்தின் உரிமையாளர் டத்தோ ஶ்ரீ சீனிவாசகம் தெரிவித்தார்.

அந்த வகையில் இரு நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆர்.எஸ்.என் ராயரும், எம். குலசேகரனும், இணைந்து தங்களின் 23 ஆவது கிளை உணவகத்தை சுபாங் ஜெயாவில் அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்திருப்பது மூலம் சீனி சட்டிசோறு உணவகம் மேலும் பல கிளைகளை திறப்பதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக டத்தோ ஶ்ரீ சீனிவாசகம் உற்சாகம் பொங்க குறிப்பிட்டார்.

கடந்த ஐந்து வருடங்களாக சீனி சட்டி சோறு உணவகத்தை திறம்பட வழிநடத்தி, வாடிக்கையாளர்களின் நீங்கா இடம் பெற்றுள்ள சீனி சட்டி சோறு உணவகத்தின் உரிமையாளர் டத்தோஸ்ரீ சீனிவாசகத்திற்கும், 23 ஆவது கிளையை சுபாங் ஜெயாவில் பெற்றுள்ள ஜெய் கோவிந்த் – ராஜேஸ்வரி தம்பதியர் மற்றும் அவர்களின் புதல்வரான அபிஷேக்கிற்கு நிகழ்வில் கலந்து கொண்ட ஆர்.எஸ்.என் ராயரும், எம். குலசேகரனும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.

WATCH OUR LATEST NEWS