துரத்திக்கொண்டு வந்த நாயிடமிருந்த தப்பிப்பதற்கு உதவிக் கேட்டு வந்த வயது குறைந்த பெண்ணை மானபங்கம் படுத்திய குற்றத்திற்காக மெக்கானிக் ஒருவருக்கு மூவார் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 5 ஆண்டு ஆண்டு சிறையும் இரண்டு பிரம்படித் தண்டனையும் விதித்தது.
லை வான்டி என்ற 33 வயதுடைய அந்த ஆடவர், தமக்கு எதிராக குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து நீதிபதி அபு பாக்கார் மானாட் .இத்தண்டனையை விதித்தார்.
சம்பந்தப்பட்ட மெக்கானிக், கடந்த அக்டோபர் 12 ஆம் தேதி இரவு 9.30 மணியளவில் பத்து பகாட்டில் உள்ள ஒரு கிராமத்தில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.