நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கெந்திங் ஹைலண்ட்ஸுக்கு செல்லும் வாகனங்களுக்கு டோல் கட்டணம் விதிக்கப்படவிருக்கிறது. இந்த டோல் கட்டண விதிப்பு அந்த மலைவாசஸ்தலத்தில் விரைவில் அமல்படுத்தப்படவிருக்கிறது.
கெந்திங் ஹைலண்ட்ஸுக்கு செல்லும் பிரதான சாலைகளில் ஒன்றான ஜாலான் பத்தாங் காலி – கோத்தோங் ஜெயா சாலையில் டோல் கட்டணம் விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
தனியார் நிறுவனம் ஒன்று , டோல் கட்டண விதிப்பை உறுதிப்படுத்தினாலும் எந்த சாலையில் டோல் கட்டணம் விதிக்கப்படும் என்ற துல்லியமான தகவலை அது வெளியிடவில்லை. டோல் கட்டண விதிப்புக்கு லிங்காரான் செக்காப் எஸ்.டி.என் என்ற நிறுவனம் பொறுப்பேற்கும் என்று கூறப்படுகிறது.