அமெரிக்காவின் மிக சிறந்த அரசியல் அறிஞரான ஹென்றி கிசிஞ்சர் ( Henry Kissinger ) காலமானார். அவருக்கு வயது 100. 1973 ஆம் ஆண்டு மிகப்பெரிய சர்ச்சைக்கு மத்தியில் நோபல் பரிசு வென்றவரான ஹென்றி கிசிஞ்சர் மூப்பின் காணமாக தமது இல்லத்தில் நேற்று இறுதி மூச்சை விட்டார்.ஒரு பழமைவாதியான ஹென்றி கிசிஞ்சர் , அமெரிக்காவின் வெளி விவகார அமைச்சராகவும், ஆலோசகராகவும், தூதராகவும் பணியாற்றிய சமயோசித மிக்க அறிஞர் ஆவார். 1969 ஆம் ஆண்டு அமெரிக்காவின் அதிபர் பொறுப்பை ஏற்ற ரிச்சர்ட் நிக்சன் அதன் பின்னர் அதிபர் பொறுப்பை ஏற்ற Gerald Ford, Jimmy Carter, Ronald Regan, George H. Bush, Bill Clinton ( பில் கிளிண்டன் ), George W. Bush ஆகியோருக்கு Henry Kissinger ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.