டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் ஒற்றுமை அரசாங்கத்தை வீழ்த்தும் துன் மகாதீர் முகமதுவின் எதிர்பார்ப்பு வெறும் கனவாகவே இருக்கும் என்று அம்னோ தலைவர் ஒருவர் பதிலடி கொடுத்துள்ளார்.
நடப்பு அரசாங்கத்தை வீழ்த்தும் முயற்சிகள் நனவாகும் என்ற எதிர்பார்ப்பில் பெரும் கனவுடன் துன் மகாதீர் இருப்பதாக அம்னோ உச்சமன்ற உறுப்பினர் புவாட் சர்காஷி தெரிவித்துள்ளார்.
ஒற்றுமை அரசாங்கத்தை வீழ்த்தி, பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தை கொண்டு வரும் அளவிற்கு அம்னோ எம்.பி.க்கள் ஆர்வமாக இல்லை. அவர்கள் தற்போது கட்சியின் புனரமைப்பை நோக்கி சென்று கொண்டிருக்கும் வேளையில் நடப்பு அரசாங்கத்தை வீழ்த்தும் நோக்கத்தில் அவர்கள் இல்லை என்று புவாட் சர்காஷி தெளிவுபடுத்தியுள்ளார்.
எம்.பி.க்களின் எண்ணிக்கையை கூட்டி, கழித்துக்கொண்டு இருக்கும் துன் மகாதீரின் முயற்சி, கனவுடன் போகும். நனவாகாது என்று புவாட் சர்காஷி விளக்கினார்.