சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வரும் காணொளி ​:போலீசார் விசாரணை

ரவாங், தாமான் துன் தெஜா 3 யில் நேற்று ஹோண்டா சிவிக் ரக காரும் யமாஹா ஈகோ மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் 18 வினாடிகள் கொண்ட காணொளி வாயிலாக தெரியவந்துள்ளது என்று கோம்பாக் மாவட்ட போலீஸ் அதிகாரி ஏசிபி நோர் அரிஃபின் முஹமாட் நசிர் தெரிவித்தார்.

அந்த காணொளியில் பிற்பகல் 3:30 மணியளவில் ஹோன்டா சிவிக் கார் ஒன்று, மோட்டார் சைக்கிள் மீது மோதி தப்பிச் செல்ல முற்பட்டதை காட்டுகிறது.

இச்சம்பவம் தொடர்பான விசாரணையில், அந்த கார் ஓட்டுநர் தமது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டிருந்த வேளையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என்று தெரியவருகிறது.

இந்த விபத்து குற்றவியல் சட்டம் 307 மற்றும் 377 பிரிவுகளின் ​கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக ஏசிபி அரிஃபின் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS