மியன்மாரில் வேலை மோசடியில் சிக்கி, தவித்த 121 மலேசியர்கள் பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.
121 மலேசியர்களும் சீனா,குன்மிங் மார்க்கமாக விமானம் மூலம் அழைத்து வரப்பட்டதாக வெளியுறவுத்துறை துணையமைச்சர் டத்தோ முஹமாட் அலாமின் தெரிவித்தார்.
அந்த 121 பேரும், மியன்மார் – சீனா எல்லைப்பகுதியான லவுக்காயிங் – கில் ஒரு மோசடிகும்பலிடம் வேலை செய்து வந்துள்ளனர். அந்த பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தொடர்ந்து யங்கோனில் உள்ள மலேசியத் தூதரகத்தின் ஒத்துழைப்புடன் மியன்மார் – சீனா எல்லை வழியாக அவர்கள் வெளியேற்றப்பட்டு, ஏர் ஆசியா விமானம் மூலம் கொண்டு வரப்பட்டதாக துணை அமைச்சர் முஹமாட் அலாமின் குறிப்பிட்டார்.
கடந்த நவம்பர் 16 ஆம் தேதி சீனா தலைநகர் பெய்ஜிங்கிற்கு அதிகாரத்துவ வருகை மேற்கொண்ட துணைப்பிரதமர் ஃபடிலா யூசோஃப், சீனாவின் துணைப்பிரதமர் லியு குவா சோங் – கை சந்தித்து இவ்விவகாரம் குறித்து பேசியதன் விளைவாக அந்த 121 மலேசியர்களும், மியன்மாரிலிருந்து சீனாவின் எல்லை வாயிலாக மீட்பதற்கு துணைப் புரிந்தது என்று முஹமாட் அலாமின் மேலும் விவரித்தார்.