நீண்ட ரயில் பாதை என்று வர்ணக்கப்படும் 665 கிலோ மீட்டர் தூரத்தைக் கொண்ட கிழக்குகரையோர இருப்புப்பாதைத் திட்டமான ஈசிஆர்எல் ரயில் சேவையில் 4ஜி தொடர்புமுறையை பொருத்தப்படுவது மூலம் நவீன LTE – ரயில்வே தகவல் தொடர்பு வலையமைப்பை செயல்படுத்திய தென்கிழக்காசியாவின் முதல் நாடாக மலேசியா வரலாறு படைக்கவிருக்கிறது.
ரயில்களுக்கான GSM-R நடமாடும் வலையமைப்பு தொழில்நுட்பத்தைவிட தகவல் தொடர்பு வலையமைப்பின் பாதுகாப்பின் அளவை அதிகரிக்கவும் , வேகமான தகவல் தொடர்பு மற்றும் சமிக்ஞையை இயக்கவும் இது உதவும் என்று மலேசிய ரயில் தொடர்புத்துறையின் தலைமைச் செயல்முறை அதிகாரி டத்தோ ஶ்ரீ டர்விஸ் அப்துல் ரசாக் தெரிவித்தார்.
ECRL ரயில் சேவையில் தொடர்பு முறையில் 4G பயன்படுத்தப்படுகிறது. எனவே எதிர்காலத்தில் மக்கள் தங்களின் தொடர்பு சாதனங்களை 5G க்கு புதுப்பிக்க விரும்பினால் அவற்றில் ஏற்கனவே உள்ள அதன் உள்கட்டமைப்பு பயன்படுத்திக்கொள்ள ஒரு சிறு மென்பொருளை மட்டுமே பொருத்திக்கொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
ரயில் சேவைகளில் தகவல் தொடர்பு கட்டமைப்பு, பாதுகாப்பு அடிப்படையில் மிக முக்கியம் வாய்ந்ததாகும் என்று டர்விஸ் அப்துல் ரசாக் மேலும் விளக்கினார்.ECRL ரயில் திட்டமானது, ஒரே நேர்கோட்டில் கிளந்தான், தும்பாட்டையும், சிலாங்கூர், கோலக்கிள்ளானையும் இணைக்கிறது.