ஷா அலாம்,ஜன.18
செக்ஷென் 21 கல்லரையிலிருந்து வெளியேறும் பகுதிற்கு அருகில் உள்ள பெர்சியாரான் ஜுப்லி பேராவில் சாலை தடையின் போது டிரெய்லர் மோதியதில் மாற்றுத்திறனாளியான கணவன் மனைவி இருவரும் காயமடைந்தனர்.
நேற்று இரவு 11.40 மணியளவில் 40 வயது மதிக்கத்தக்க அத்தம்பதியர்கள் பயணித்து சென்ற மோட்டார் சைக்கிளை புக்கிட் ஜெலுத்தோங் காவல்துறை உறுப்பினர்கள் சோதனை மேற்கொண்டிருக்கும் பொழுது இச்சம்பவம் நடந்ததாக தெரியவந்துள்ளது.
டிரெய்லர் மோதியதில் அவ்விருவரும் பலத்த காயங்களுக்கு ஆளாகி இருப்பதாக ஷா அலாம் மாவட்ட போலீஸ் அதிகாரி ஏசிபி முஹமாட் இக்பால் இப்ராஹிம் கூறினார்.
பாதிக்கப்பட்ட அந்நபர்கள் ஷா அலாம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக முஹமாட் இக்பால் விளக்கினார்.