ஜெலி,ஜன.18
காட்டு ஆண் யானை ஒன்று பத்து மெலிந்தாங், கம்போங் காலாய் – விற்கு கிளாந்தான் வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்கா துறை நேற்று இடம் மாற்றம் செய்தனர்.
குறிப்பிடப்பட்ட வனவிலங்கு கிராமத்தில் அத்துமீறி நுழைந்ததாக குடியிருப்பாளர்களிடமிருந்து கிடைக்க பெற்ற புகாரை தொடர்ந்து கடந்த ஜனவரி 11 ஆம் தேதி இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கிளாந்தான் வனவிலங்கு துறை அதிகாரி முஹமாட் ஹஃபிட் தெரிவித்தார்.
இந்த வனவிலங்கு தேசிய பூங்கா அல்லது பாதுகாப்பான வசிப்பிடத்திற்கு இடமாற்றப்படும் என்று முஹமாட் ஹஃபிட் செய்தியாளர்களிடம் கூறினார்.
பேராவில் உள்ள தெமெஙோர் எல்லை பகுதியான கூனோங் புசோர் ரில் வன காப்பகத்திற்கு அருகில் கிராம மக்களின் தோட்டங்கள் இருப்பதால் காட்டு யானையை இடம் மாற்றம் செய்தது ஒரு நிரந்தர தீர்வாக இருக்காது என்று அவர் அறிவித்தார்.