பெத்தாலிங் ஜெயா,ஜன.18
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் நெல் விளைச்சல் பாதிப்படைந்ததுடன் 24.5 மில்லியன் வெள்ளி நஷ்டமடைந்துள்ளதாகவும் விவசாயம், உணவு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி 15 ஆம் தேதி வரையில் ஆறு மாநிலங்களில் ஏறத்தாழ 2,542 விவசாயிகளின் நெல் பாதிப்படைந்திருப்பதாக அறியப்படுகிறது.
பேரா, நெகிரி செம்பிலான், ஜொகூர், கிளந்தான், திரெங்கானு, பகாங் ஆகிய பகுதிகளில் நெல் விளைச்சல் வெள்ளத்தினால் மோசமடைந்திருப்பதாகவும் இவ்வாண்டு அறுவடை நிச்சயம் பாதிக்கப்படும் என்றும் அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதுக்குறித்து விவசாயத்துறை, மாவட்ட மற்றும் மாநில தலைவர்கள் உதவிகளை வழங்குவதற்கான தரவுகளை சேகரிப்பதில் தீவிரமாக ஈடுபாடு செலுத்தி வருவதாக விவசாயம், உணவு பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கிறது.