அந்த தகவலை மறுத்தது தொடர்புத்துறை அமைச்சு

புத்ராஜெயா, மே 23-

வாட்ஸ்அப் செயலின் மூலம் அழைப்புகள் விடுப்பது மற்றும் குறுந்தகவல்களை அனுப்புவது போன்றவற்றில் புதிய தொடர்பு முறைக்கான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுவதை தொடர்புத்துறை அமைச்சு மறுத்துள்ளது.

இது போன்ற அடிப்படையற்ற தவறான மற்றும் பொய்யான தகவல்களை பகிர வேண்டாம் என்று பொது மக்களை அந்த அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

தொடபுத்துறை அமைச்சு, எந்தவொரு விதிமுறையையோ அல்லது வழிகாட்டலையோ வெளியிடவில்லை என்று அந்த அமைச்சு ஓர் அறிக்கையின் வழி தெளிவுபடுத்த்தியுள்ளது.

WATCH OUR LATEST NEWS